Saturday, March 7, 2009

மனம் திறந்து பேசுங்கள்

உங்கள் மனதில் புழுங்கிக் கொண்டிருக்கும் ஒன்றை
வெளிப்படையாகவே பேசுங்கள்.அத்தகைய உணர்ச்சிகளை
மனத்திற்குள்ளேய்யே போட்டு பூட்டி வைக்காதீர்கள்.
அவ்வாறு நீங்கள் பூட்டி வைத்தால்,ஆபத்தான நிலையில
அது வேடித்து வெளிப்படக்கூடும்.இதனை பேசி தீர்ப்பது
அல்லது பேசி வெளிப்படுத்துவது என்கிறார்கள்.

விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது செயல்கள்
ஆகியவற்றை மனத்திற்குள்ளேயே அழுத்தி
வைக்கும் போது உணர்ச்சி இறுக்கம் ஏற்பட்டு ஆபத்தான
நிலையை அடைகிறது.இவ்வாறு அடைத்து வைப்பதற்கு
பதிலாக உணர்ச்சிகளை வெளியே கொட்டிவிட்டால்
மன இருக்கம் நீங்கிவிடுகிறது.

மனதிற்குள் புதைந்துள்ள விஷயங்களை வெளியேற்றி
விடுவது அவசியம்.நோயாளி அழுத்தி வைக்கப்பட்டுள்ள
விரும்பதகாத சிந்தனைகளை வெளிப்படுத்துவதே
ஒரு சிகிச்சை முறையாகும்.

உங்களுடைய உணர்ச்சி இறுக்கத்திற்கோ,மன
இறுக்கத்திற்கோ காரணம் இதுதான் என்று உங்களுக்கு
தெளிவாக தெரிந்திருக்குமேயானால் பேசுவதன் மூலம்
அதை நீங்கள் வெளியேற்றிக் கொண்டுவிட முடியும்.

உங்களை பற்றி நன்கு தெரிந்த உங்கள் நம்பிக்கைக்கு
பாத்திரமான நீங்கள் மனம் விட்டு பேசலாம்.சரியான
மனிதரை தேர்ந்தெடுத்து நீங்கள் பேச வேண்டும்.
அனைவரிடமும் மனதை திறந்து காட்டிப் பயனில்லை.